உக்ரைனுக்கு மேலும் ஆயுதங்களை அனுப்புவதற்கான ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியின் அழைப்புக்கு பல நாடுகள் பதிலளித்துள்ளன.
இதன்படி, பிரித்தானியா, போலந்து, லாட்வியா, லிதுவேனியா, டென்மார்க், செக் குடியரசு, எஸ்டோனியா, நெதர்லாந்து மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகள் தங்களது உதவிகளை அறிவித்துள்ளன.
அதேவேளை, கவச வாகனங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் உட்பட 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள இராணுவ தொகுப்பை அமெரிக்கா அறிவித்துள்ளது.
நேற்று நடந்த ஒரு கூட்டத்தில் 11 நாடுகளின் பிரதிநிதிகள் எஸ்டோனியாவில் உள்ள ஒரு இராணுவ தளத்தில் கூடி உக்ரைனை மீண்டும் கைப்பற்றுவதற்கும் மேலும் ரஷ்ய முன்னேற்றங்களைத் தடுப்பதற்கும் உதவும் புதிய தொகுப்புகள் குறித்து விவாதித்தனர். இதன்போது மேற்குறித்த அறிவிப்புகள் வெளியாகின.
இன்று (வெள்ளிக்கிழமை) ஜேர்மனியில் திட்டமிடப்பட்ட நெருக்கடியான கூட்டத்திற்கு முன்னதாக இந்த அறிவிப்புகள் வந்துள்ளன. இதில் 50 நாடுகள் ஆயுத விநியோகத்தை ஒருங்கிணைக்க உள்ளன.
ஒரு கூட்டு அறிக்கையில் அறிவிக்கப்பட்ட தொகுப்புகள் பின்வருமாறு, பிரித்தானியா – 600 பிரிம்ஸ்டோன் ஏவுகணைகள், டென்மார்க் – 19 பிரெஞ்சில் தயாரிக்கப்பட்ட சீசர் சுயமாக இயக்கப்படும் ஹோவிட்சர்கள், எஸ்டோனியா – ஹோவிட்சர்கள், வெடிமருந்துகள், ஆதரவு வாகனங்கள் மற்றும் டேங் எதிர்ப்பு கையெறி குண்டுகள், லாட்வியா – ஸ்டிங்கர் வான்-பாதுகாப்பு அமைப்புகள், இரண்டு ஹெலிகொப்டர்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள், லிதுவேனியா – விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் மற்றும் இரண்டு ஹெலிகொப்டர்கள், போலந்து – 70,000 வெடிமருந்துகளுடன் எஸ்-60 விமான எதிர்ப்பு துப்பாக்கிகள், செக் குடியரசு – மேலும் பெரிய அளவிலான வெடிமருந்துகள், ஹோவிட்சர்கள் மற்றும் ஏ.பி.சி.களை உற்பத்தி செய்கிறது. நெதர்லாந்து தனது ஆதரவை வெள்ளிக்கிழமை அறிவிக்கும்.
ஆனால் பென்டகன் உக்ரைனுக்கு கூடுதலாக 59 பிராட்லி கவச வாகனங்கள், 90 ஸ்ட்ரைக்கர் பணியாளர்கள் கேரியர்கள் மற்றும் அவெஞ்சர் வான் பாதுகாப்பு அமைப்புகள், மற்ற பெரிய மற்றும் சிறிய வெடிமருந்துகளுடன் உறுதியளித்தது.