ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம், ஜம்மு காஷ்மீரில் நேற்றுடன் நிறைவடைந்தது.
கன்னியாகுமரி முதல் ஜம்மு – காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை எனும் பெயரில் யாத்திரையை கடந்தாண்டு செப்டம்பர் 7ஆம் திகதி ஆரம்பமான, நடைபயணம் பல்வேறு மாநிலங்களில் 75 மாவட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
பல்வேறு வரவேற்பு மற்றும் நெருக்கடிக்கு மத்தியில் தனது நடைபயணத்தை தொடர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி, ஸ்ரீநகரில் நேற்று தனது நடைபயணத்தை முடித்துக்கொண்டார்.
நடைபயணத்தின் நிறைவில் ஸ்ரீநகரில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் உரையாற்றிய ராகுல்காந்தி, இந்தியாவின் மதச்சார்பற்ற நெறிமுறைகளை காப்பதே, இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் நோக்கம் என தெரிவித்தார்.
தனக்காகவோ அல்லது காங்கிரஸ் கட்சியை முன்னிறுத்தியோ அல்லாமல், நாட்டு மக்களுக்காகவே இந்த நடைபயணத்தை தாம் மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் கூட்டணிக்கட்சிகளின் முன்னணி நிர்வாகிகள், நடைபயண இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.