தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
கிம்பர்லே மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 346 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோஸ் பட்லர் 131 ஓட்டங்களையும் டாவிட் மாலன் 118 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், லுங்கி ங்கிடி 4 விக்கெட்டுகளையும் மார்கோ ஜென்ஸன் 2 விக்கெட்டுகளையும் மகலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 347 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, 43.1 ஓவர்கள் நிறைவில் 287 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், இங்கிலாந்து அணி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹெய்ன்ரிச் க்ளாசென் 80 ஓட்டங்களையும் ரீஸா ஹென்ரிக்ஸ் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஜொப்ரா ஆர்செர் 6 விக்கெட்டுகளையும் அடில் ராஷித் 3 விக்கெட்டுகளையும் கிறிஸ் வோக்ஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் ஜோஸ் பட்லர் தெரிவுசெய்யப்பட்டார்.