இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்கா வருமாறு ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த சந்திப்பை இரு நாட்டு அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அதற்கான திகதியை நிர்ணயிப்பது குறித்தும் கவனம் செலுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஆண்டு, ஜி-20 உச்சி மாநாடு உட்பட பல உலகளாவிய செயல்பாடுகளுக்கு தலைமை தாங்க இந்தியா தயாராக உள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அழைப்பு தனித்துவமானது என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.