நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதற்கு ஜனாதிபதியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.நாங்கள் நாடு முழுவதும் சேவையாற்றிவருகின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுகமும் தேர்தல் பரப்புரைகளும் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.
இதன்கீழ் மண்முனைப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட அரையம்பதி,கோவில் குளம் பகுதியில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வும் நடைபெற்றது.
இதன்போது உரையாற்றி எதிர்க்கட்சி தலைவர், ”எதிர்வரும் தேர்தலின் போது இந்த மட்டக்களப்பு மாவட்ட ரீதியிலே காணப்படக்கூடிய பிரதேச சபைகளிலே எங்கள் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக வேட்பாளர்கள் களமிறங்க இருக்கிறார்கள் அந்த தேர்தலில் முடிவுகளின் போது அனைத்து வேட்பாளர்களை நீங்கள் வெற்றி பெறச் செய்து சபைகளை நீங்கள் ஐக்கிய மக்கள் சபையாக்கும் பட்சத்தில் இந்த பிரதேசத்துக்கு தேவையான அத்தனை உதவிகளையும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக நாங்கள் நிச்சயமாக செய்வோம் என்று வாக்குறுதிகள் வாங்கிக் கொள்ள விரும்புகிறேன்
இப்படி நாடு முழுவதுமாக நாங்கள் மக்களுக்கு பணியாற்றுவதற்கு நிச்சயமாக ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை மக்கள் சேவைகளை நாங்கள் தேடி தேடி செய்பவர்கள்.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி சபைகள் காணப்படுகின்றன 144 தொகுதிகள் அதேபோல 345 கிராமிய பிரிவுகள் 1240 கிராமங்கள் கடந்த காலங்களில் நாங்கள் பாரிய சேவைகளை இந்த பிரதேசத்தில் செய்திருக்கிறோம்.
மார்ச் மாதம் ஒன்பதாம் திகதியிலே உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மட்டக்களப்பிலே காணப்படக்கூடிய 12 பிரதேச சபைகளையும் வெற்றியடைய செய்யும்பொழுது நிச்சயமாக மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கும் எங்களுடைய அபிவிருத்தி வேலைகளை நிச்சயமாக நாங்கள் கல்வியும் ஒரு இலக்கை சுகாதாரத்தில் ஒரு இலக்கை இந்த மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு முதலாவதாக நான் செய்து தருவேன்.
கடந்த காலங்களில் நான் வீடமைப்பு கட்டுமான அமைச்சராக இருந்தபோது இந்த மட்டக்களப்பு மாவட்டத்திலே நாங்கள் ஆயிரக்கணக்கான மக்களுக்கு நாங்கள் வீடுகளை வழங்கி இருந்தோம்.
அதிகமான ஆயிரக்கணக்கான மக்களுக்கு நாங்கள் கிராமங்கள் தோறும் சென்று வீடுகளை வழங்கியிருந்தோம், வீட்டுக்கு தேவையான பொருட்களை வழங்கியிருந்தோம் அதேபோல கடன் அடிப்படையிலானவர்களுக்கு வீடுகள் வழங்கி இருந்தோம் அது மாத்திரமல்ல அரசாங்க அதிகாரிகளுக்கும் அதேபோல ஏனைய அதிகாரிகளுக்கும் அதேபோல இந்த பிரதேசத்தில் காணப்படக்கூடிய ஏனைய சாரர்களுக்கும் நாங்கள் அதிகமான வீடுகளை வழங்கி இருந்தோம்.
எனவே அந்த காலத்திலே நிச்சயமாக இந்த பகுதிக்கு நாங்கள் விஜயம் செய்து ஒவ்வொருவருடைய மக்களுடைய குறைகளை நாங்கள் கண்டறிந்து எங்களால் முடிந்த உதவிகளை செய்தோம் எனவே நான் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன் இந்த மட்டுமா நகரிலே இங்கே காணப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அதிகமான வீடுகளை கட்டிக் கொடுத்தது ரணசங்க பிரேமதாசனுடைய மகன் சஜித் பிரேமதாசா என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
ஐக்கிய மக்கள் சக்தியானது முதல் தடவையாக தற்பொழுது உங்களுடைய பிரதேசங்களிலே உள்ளூராட்சி மன்றங்களிலே தற்பொழுது வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது நீங்கள் கடந்த காலங்களிலே நீங்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்திருக்கலாம் அதேபோல மொட்டு கட்சிக்கு வாக்களித்திருக்கலாம் அதேபோல ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களித்திருக்கலாம் ஆனால் நாங்கள் முதன்முறையாக இலங்கையிலே ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக வேட்பாளர்களை வாக்களித்திருக்கிறோம்.
எந்த விதமான ஒரு ஊழல் லஞ்சம் அற்ற சரியான முறையில் நேர்மையான மக்களுக்கு சேவை செய்யக்கூடிய வேட்பாளர்களை நாங்கள் களமிறக்கி இருக்கிறோம் எனவே முதல் தடவையிலே ஒரு மங்களகரமான ஒரு வேட்பாளர் கழகத்தை நான் இறக்கி இருக்கிறோம்.
சில்வர் கூறுவார்கள் எப்படியாவது எங்களுக்கு இந்த பிரதேச சபையிலே ஒவ்வொருவரை நீங்கள் மெம்பர் ஆகித் தாருங்கள் சேவை செய்கிறோம் எப்படியாவது எங்களை நீங்கள் பிரதமர் ஆக்கி விடுங்கள் சேவை செய்கிறோம் ஜனாதிபதி ஆகிவிடுங்கள் சேவை செய்கிறோம் ஆளுனராக்கி விடுங்கள் சேவை செய்கின்றோம் என கூறுவார்கள் ஆனால் சஜித் பிரேமதாச அப்படி அல்ல.
நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் வராவிட்டாலும் மக்கள் சேவைகளை தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம் குறிப்பாக நான் தற்போது கூறிய விடயங்கள் ஒரு எதிர்க்கட்சி தலைவராக இருந்து கொண்டு இலங்கையில் நாங்கள் பல்லாயிரக்கணக்கான சேவைகளை செய்து கொண்டிருக்கிறோம்.
நான் உங்களை பார்த்து கூறிக் கொள்ள விரும்புகிறேன் எதிர்வரும் இந்த மூன்றாம் மாதத்தில் ஒன்பதாம் தேதியிலே ஒரு பெரிய தேர்தலை நாங்கள் அதாவது அது சிறிய தேர்தல் ஆக இருந்தாலும் முதல் தடவை எங்களுடைய கட்சியினுடைய உறுப்பினர்கள் களமிறக்கி இருக்கிறோம்.
குறிப்பாக இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி மன்றங்களும் நீங்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கும் அதே போல டெலிபோன் சின்னத்துக்கும் வாக்களித்து 12 சபைகளையும் வெற்றியடைய செய்யும்போது நான் இந்த மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்து அதிகப்படியான அபிவிருத்திகளை ஒவ்வொரு கிராமங்கள் தோறும் செய்து தருவேன் செய்து முடிப்பேன் என்ற உத்தரவாதத்தினை உங்கள் மத்தியில் நான் முன்வைத்துக் கொள்ள விரும்புகிறேன்.
நீங்கள் கடந்த தசாபங்களிலே வருடங்களிலே காலங்களிலே நீங்கள் ஒவ்வொரு கட்சியின் பின்பாக சென்று இருப்பீர்கள் ஒவ்வொரு கட்சியினுடைய அரசியல் கட்சியினுடைய தலைவரின் பின்பாக சென்று இருப்பீர்கள் அவர்கள் உங்களுக்கு அழகான வாக்குறுதிகளை கடந்த காலங்களில் வழங்கி இருப்பார்கள் ஆனால் அவர்கள் கூறிய வாக்குறுதிகளை உங்களுக்கு செய்துள்ளார்களா என்று ஒரு கேள்வியை கேட்டால் இல்லை என்று தான் பதில் வரும்.
ஆனால் செய்த செய்திருப்பார்கள் அவர்கள் தங்களுடைய பரம்பரை தங்களுடைய சொந்த பந்தங்களுக்கு தாங்கள் அதிலே அதிகமான நலத்திட்டங்களை பெற்றிருப்பார்கள் உல்லாச வாழ்க்கையை சுபமுக வாழ்க்கையை வெளிநாட்டு வாழ்க்கையை வாழ்ந்திருப்பார்கள் மாறாக என்னுடைய மக்களுக்கு அவர்கள் எந்த விதமான செயல்களையும் செய்திருக்க மாட்டார்கள்.
இதுதான் உண்மை ஒருவர் ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒவ்வொரு வேட்பாளர்களை கேட்கும் பொழுது ஒவ்வொரு மக்களிடத்திலே கேட்கும் போது கூறுவார்கள் என்று கூறுவார்கள் இது ஒரு மந்திரமாக எல்லா இடத்திலும் பரவிக்கொண்டு தான் இருக்கிறது.
நான் உங்களை பார்த்து தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன் ஐக்கிய மக்கள் சக்திக்கு நீங்கள் வாக்களியுங்கள் எந்த விதமான கலப்படமும் இல்லாத வேட்பாளனை களத்தில் நிறுத்தி இருக்கிறோம் அது எப்படி சாத்தியமாகும் என்று கூறினால் எங்களுடைய வேட்பாளர்கள் அங்கே தேர்தலில் வென்றதன் பின்பு சபைகளுக்கு அங்கே தவிசாளர்களாக, உபதவிச்ளர்களாக, உறுப்பினராக வருவார்கள் தெரிவாகி அங்கே வருவார்கள் அவர்கள் யாரும் கொன்ரேக்ட் செய்ய முடியாது, மண் பர்மிட் செய்யமுடியாது, எனவே அரசாங்க சட்டதிட்டங்களுக்கு அமையவே செய்வார்கள்.
அவர்கள் உங்களை வைத்து பணம் சம்பாதிக்க முடியாது மாறாக தங்களுடைய பக்கத்திற்கு பணத்தை மக்களுக்கு வழங்க வேண்டும் இதுதான் ஐக்கிய மக்கள் சக்தி உடைய நியதி என்பதை நான் தற்போது உங்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
வெற்றியடையக் கூடிய ஒவ்வொரு சபைகளிலும் நாங்கள் ஸ்மார்ட் கவுன்சிலின் சொல்லக்கூடிய ஒரு விடயத்தை உருவாக்கி அதன் மூலமாக நாங்கள் தகவல் தொழில்நுட்பத்தினையும் கணினி அறிவினையும் அதேபோல ஆங்கில் அறிவினையும் நாங்கள் அந்த பகுதியிலே காணப்படக்கூடிய இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கு நாம் கற்பித்திருக்கிறோம்.
அதன் மூலமாக அவர்கள் சர்வதேசத்துடன் போட்டி போடும் அளவுக்கு ஒரு நுண்ணறிவு ஒரு அறிவு கூர்மையான ஒரு சமுதாயத்தை நாங்கள் இந்த பிரதேச சபைகள் வாயிலாக உருவாக்கி இருக்கிறோம்.
அதேபோல இந்த சபைகளுக்குள் சரியான முறையில் வேலைகள் இடம் பெறுகின்றனவா என்பதனை கண்காணிப்பதற்கு இளைஞர் ஆலோசனை சபை ஒன்றை உருவாக்கி இளைஞர்களுடாக ஒவ்வொரு சபையிலே நாங்கள் கண்காணித்து இருக்கிறோம்.
அது மாத்திரமல்ல அந்த சபைக்கு உட்பட்ட பகுதிகளிலே காணப்படக்கூடிய ஒவ்வொரு வீடுகளுக்கும் நாங்கள் மின்சாரத்தை சேமிக்கும் முகமாக அதாவது மின்சாரத்தினுடைய விலை குறைக்கும் முகமாக கூரைமேல் சூரிய மின் உற்பத்தி என்று சொல்லக்கூடிய ஒரு மின் உற்பத்தி ஒரு சாசனத்தை நாங்கள் உண்டாக்கி இருக்கிறோம்.
அதன் மூலமாக எங்களுடைய வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தை பெற்றுக்கொண்டு எஞ்சிய மின்சாரத்தை நாங்கள் இலங்கை மின்சார சபைக்கு நாங்கள் விற்பனை செய்ய முடியும் அதன் வழி வாயிலாக ஒவ்வொரு வீடுகளுக்கும் மேலதிகமாக பொருளாதாரத்தை ஈட்டக்கூடிய எங்களுக்கு ஒரு தொகையான பணம் கிடைக்கிறது இப்படி அனைத்து பிரதேச சபைக்கு உட்பட்ட வீடுகளுக்கு நாங்கள் செய்ய இருக்கிறோம்.
அது மாத்திரமல்ல இந்த மண்முனை பற்று பிரதேச சபைக்கு மாத்திரம் அல்ல அதாவது இந்த பிரதேச சபையினை நாங்கள் வெளிநாடுகளிலே வளர்ச்சி அடைந்த நாடுகளிலே இப்படியான பிரதேச சபைகள் உள்ளூராட்சி மன்றங்கள் காணப்படுகின்றன அந்த பகுதிகளில் காணப்படக்கூடிய அதாவது தனவந்தர்களை நாங்கள் தொடர்பு படுத்தி மிகப்பெரிய தொழிற்சாலைகளை நிறுவனங்களை தொடர்பு எடுத்து நாங்கள் இந்த பிரதேச சபையுடன் இணைத்து அவர்கள் அந்த அந்த வெளிநாடுகளை செய்யக்கூடிய அந்த பொருள் உற்பத்தியினை அதே போல பொருளாதார விருத்திகளை நாங்கள் இந்த பகுதியிலும் நாங்கள் செய்ய இருக்கிறோம்.
இது மாத்திரமல்ல இலங்கையில் காணப்படக்கூடிய 341 உள்ளூராட்சி சபைகளுக்கும் நாங்கள் வெளிநாடுகளிலே காணக்கூடிய பொருள் உற்பத்திமிக்க கம்பெனிகளை அறிமுகம் செய்து இலங்கையில் காணப்படக்கூடிய ஒவ்வொரு பிரதேச உள்ளூராட்சி மன்றங்களை அபிவிருத்தி செய்ய இருக்கின்றோம்.
இவற்றைசெய்வதற்கு நாங்கள் இலங்கையிலே ஒரு பெரிய பதவியில் இருக்க வேண்டும் ஜனாதிபதி அந்தஸ்தில் இருக்கவேண்டும் என்று இல்லை ஜனாதிபதியினை எனக்கு மக்கள் தர இருக்கிறார்கள் அதற்கு முன்பதாக பிரதேச சபைகளை கைப்பற்றியவுடன் இலங்கையில் காணப்படக்கூடிய 341 பிரதேச சபைகளுக்கும் குறிப்பாக இந்த மண்முனை பற்று பிரதேச சபை மட்டக்களப்பு மாவட்ட பிரதேச சபை அடங்கலாக அனைத்து பிரதேச சபைகளுக்கும் நாங்கள் இந்த பொருளாதார புரட்சியை பொருளாதார உற்பத்தியை நாங்கள் மேலே கொண்டு வருவோம் என்ற உத்தரவாதத்தினை கொண்டு வருவோம் என இந்த மேடையில் தெரிவித்துக் கொள்கிறோம்.”என தெரிவித்தார்.