ரஷ்யாவிற்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகள் பற்றிய வாக்குறுதியை சுமந்து, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் உக்ரைனை வந்தடைந்துள்ளனர்.
ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் விரைவாக உறுப்பினராகும் உக்ரைனின் நம்பிக்கையை சிதைத்துள்ளனர்.
உக்ரைன் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்காக நேற்று (வியாழக்கிழமை) ரயிலில் தலைநகர் கிய்வ்வை வந்தடைந்த ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் உர்சுலா வான் டெர்னை உக்ரைனிய அதிகாரிகள் வரவேற்றனர்.
இது ரஷ்யாவின் ‘பெப்ரவரி 24’ படையெடுப்பின் முதலாம் ஆண்டு நிறைவு நாளில், உக்ரைனுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் ஒரு அடையாளப் பயணமாகும்.
ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகத்தின் மூத்த உறுப்பினர்கள் உக்ரைனிய அரசாங்கத்தில் உள்ள தங்கள் சகாக்களை சந்தித்தனர் மற்றும் வான் டெர் லேயன் மற்றும் 27 ஐரோப்பிய ஒன்றிய தேசிய தலைவர்களின் தலைவரான சார்லஸ் மைக்கேல் ஆகியோர் இன்று (வெள்ளிக்கிழமை) உக்ரைனிய ஜனாதிபதி வோலோடோமிர் ஸெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
ஸெலென்ஸ்க, ரஷ்யாவிற்கு எதிராக மேலும் தண்டனை நடவடிக்கைகளை சுமத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்தியுள்ளார், ஆனால் 10ஆவது சுற்று பொருளாதாரத் தடைகள் ஆண்டு விழாவிற்கு தயாராகி வருகின்றன, இது உக்ரைனின் அரசாங்கத்தின் கோரிக்கைகளுக்கு குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ரஷ்யப் படையெடுப்பிற்குப் பிறகு உக்ரைனில் நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.