லிட்ரோ சமையல் எரிவாயு விலைத் திருத்தம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அறிவிப்பதற்காக லிட்ரோ நிறுவனம் இன்று முற்பகல் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 12.5 கிலோகிராம் எடைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 500 ரூபா அளவில் அதிகரிக்கப்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்துள்ளமையால் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.













