இலங்கை வந்துள்ள முன்னாள் ஐநா செயலாளர் பான் கீ மூனுக்கு, போர் முடிந்த சில நாட்களில் மஹிந்த ராஜபக்ஷவுடன் சேர்ந்து வெளியிட்ட கூட்டறிக்கையை ஞாபகப்படுத்த வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் கட்சிகளுடன் பேச்சு நடத்தி 13ஐ அமுல்படுத்தி அதற்கு அப்பால் 13+ உடன்படுவதாகவும், அதேபோல் சர்வதேச மனித உரிமை நியமங்களை இலங்கையில் கடை பிடிப்பதாகவும் பான் கீ மூனுக்கு மஹிந்த ராஜபக்ஷ ஊறுதியளித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது ஆளும் கட்சியான பொதுஜன பெரமுனவுக்கும் மஹிந்த ராஜபக்ஷவின் பின்னால் இன்னமும் நிற்கும் சில பெளத்த பிக்குகளுக்கும் ஞாபகப்படுத்த வேண்டும் என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இன்று, பொறுப்பை நிறைவேற்றாமல் தவறு செய்து, குற்றவாளி கூண்டில் நிற்பது மஹிந்த ராஜபக்ஷ மட்டுமல்ல என்றும் ஒட்டு மொத்த ஐ.நா. அமைப்பும் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தில் ஐநா விட்ட தவறு தொடர்பாக அன்றே ஐநா சபைக்குள் ஒரு உள்ளக அறிக்கை தயார் செய்யப்பட்டதை தான் அறிவேன் என்றும் அது பற்றி, பாங்கி-மூன் பகிரங்கமாக பேச வேண்டும் என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.