துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தி 300 ஐ தண்டியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
துருக்கியில் 5 ஆயிரத்து 894 பேரும், சிரியாவில் 2 ஆயிரத்து 470 பேரும் உயிரிழந்துள்ளமை இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக சிரியா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை மேற்கத்திய நாடுகள் நீக்க வேண்டும் என சிரிய செஞ்சிலுவைச் சங்கம் கோரியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் உணவுத்திட்டம் ஆகியன தமக்கு ஆதரவை வழங்க வேண்டும் என்றும் சிரியா கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக சீனா மற்றும் தென்கொரியா ஆளணி உதவிகளை வழங்கியுள்ளது.