துருக்கியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சகல விளையாட்டுகள் மற்றும் நிகழ்வுகளையும் இரத்து செய்யுமாறு அந்த நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
மறு அறிவித்தல் வரை சகல போட்டிகளிலும் இரத்து செய்யப்படுவதாக தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சகலவிதமான உதைபந்தாட்ட போட்டிகளும் இரத்து செய்யப்படுவதாக துருக்கி உதைபந்தாட்ட சம்மேளனம் முன்னதாக அறிவித்திருந்தது.
இதேவேளை துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி அந்நாட்டு உதைபந்தாட்ட அணியின் கோல்கீப்பர் அஹ்மத் ஐயுப் துர்கஸ்லான் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.