மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை வேறு கல்லூரிக்கு மாற்ற அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
கடந்தாண்டு நடைபெற்ற பொறியியல் கலந்தாய்வில் 9 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேராத நிலையில், 88 கல்லூரிகளில் 25 சதவீதத்திற்கும் குறைவாகவே மாணவர் சேர்க்கை இருந்துள்ளது.
சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் நேரில் சென்று ஆய்வு செய்ய அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
அவ்வாறு ஆய்வை மேற்கொள்ளும்போது பேராசிரியர் எண்ணிக்கை குறைவு, உள்கட்டமைப்பு வசதிகள் சரியில்லாத கல்லூரிகளின் அங்கீகாரம் இரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளது.