தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு போராட்டம் காரணமாக, கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த சங்கத்தினால் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக நாடளாவிய ரீதியில் பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.