ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பாக இரண்டு நாள் விவாதம் நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு அண்மையில் கூடிய போது இந்த தீர்மான் எடுக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் இன்று சம்பிரதாயப்பூர்வ நிகழ்வில் கலந்துகொள்ளாத ஐக்கிய மக்கள் சக்தி இந்த விவாதத்திலும் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளை ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட அரசாங்க கொள்கை அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.
கொள்கைப் பிரகடனம் மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் இரண்டாம் நாள் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.