1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரிமைச் சட்டத்தின் ஊடாக முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் அனுபவிக்கும் சலுகைகள் தமது அரசாங்கத்தின் கீழ் இரத்து செய்யப்படும் என தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் பொதுமக்கள் பல இன்னல்களை எதிர்கொண்டு வரும் நிலையில் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்களுக்கு ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக அக்கட்சியின் உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.
பொது மக்களுடன் ஒப்பிடுகையில், இவர்களுக்கு எந்தவிதமான நிதிச் சிக்கல்களும் இல்லாத இந்த நிலையில் அவர்களுக்கு வழங்கப்படும் தொகைகள் ஆண்டுதோறும் அதிகரிக்கப்படுவதாகவும் சுனில் ஹந்துநெத்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் குறித்த சட்டத்தின் மூலம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வாடகை இல்லா வசிப்பிடம், மாதாந்த கொடுப்பனவு, போக்குவரத்து வசதிகள் மற்றும் ஓய்வூதியம் போன்றவை வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.