1900 ஆம் ஆண்டு முதல் கடல் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் தாழ்வான கடலோரப் பகுதிகள் மற்றும் சிறிய தீவுகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படவுள்ளனர்.
இந்நிலையில் கடல் மட்டம் உயர்வதால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் எச்சரித்துள்ளார்.
கடல் மட்டம் உயர்வதால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் இடம்பெற்ற விவாதத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பாங்கொக், பியூனஸ் அயர்ஸ், ஜகார்த்தா, லாகோஸ், லண்டன், லொஸ் ஏஞ்சல்ஸ், மும்பை, நியூயோர்க் மற்றும் ஷாங்காய் போன்றவை கடுமையாக பாதிக்கப்படும் என கூறியுள்ளார்.
கடந்த 11,000 ஆண்டுகளில் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு கடந்த நூற்றாண்டில் உலகப் பெருங்கடல் வேகமாக வெப்பமடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே வளரும் நாடுகள், குறிப்பாக, வேகமாக மாறிவரும் உலகத்திற்கு ஏற்ப வளங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அன்டோனியோ குட்ரெஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
காலநிலை மாற்றம் உலகத்தை வெப்பமாக்குவதால் பனிப்பாறைகள் மற்றும் பனிக்கட்டிகளை உருகுவதால் இந்நிலை ஏற்படுட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.