வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 13 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்களை இலங்கை சுங்கப் பிரிவினர் மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் கைப்பற்றியுள்ளனர்.
ஜேர்மனி, இங்கிலாந்து, கனடா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இருந்து வந்த பொதிகளில் இந்த போதைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு, பொரலஸ்கமுவ, பிலியந்தலை, பாதுக்க மற்றும் பாணந்துறையில் உள்ளதாக கூறப்படும் நபர்களுக்கு குறித்த பொதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
எனினும், குறித்த முகவரிகள் போலியானவை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்களில் 750 கிராம் குஷ் மற்றும் 207 போதை மாத்திரைகள் உள்ளடங்குவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.