அமெரிக்க கடற்பகுதியில் சீன உளவு பலூன் பறந்த விவகாரம் தொடர்பில், இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ‘தாங்கள் ஒரு புதிய பனிப்போரைத் தேடவில்லை’ என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அமெரிக்க கடற்பகுதியில் சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்தியதற்காக மன்னிப்பு கேட்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, பலூன் கண்காணிப்புக்கு பயன்படுத்தப்பட்டது எனவும் வட அமெரிக்கா மீது சுட்டு வீழ்த்தப்பட்ட மற்ற மூன்று பொருட்கள் வெளிநாட்டு உளவு கைவினைப்பொருட்களாக இருக்க வாய்ப்பில்லை என்று அவர் கூறினார்.
இதேபோன்ற வான்வழி பொருட்களைக் கண்டறிவதை அமெரிக்கா இப்போது மேம்படுத்தும் அதேவேளை, இம்மாத சம்பவம் குறித்து விரைவில் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்குடன் பேச உள்ளதாகவும் பைடன் கூறினார்.
பலூன் கண்காணிப்புக்கு பயன்படுத்தப்பட்டதை மறுத்த சீனா, மாறாக வானிலை தரவுகளை சேகரிக்கும் போது அது வெடித்து சிதறியதாக கூறியுள்ளது.