புதிய வீட்டுவசதி மற்றும் விவசாயத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாக்களில் வட கொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன், கலந்து கொண்டதாக கொரியா மத்திய செய்தி நிறுவனம் (கேசிஎன்ஏ) தெரிவித்துள்ளது.
ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நாட்டில் உணவு நிலைமை குறித்த கவலைகளுக்கு மத்தியில், இந்த சம்பவம் நடந்துள்ளது.
தலைநகர் பியாங்யாங்கின் புறநகரில் ஒரு பெரிய பசுமை இல்ல பண்ணையை கட்டுவதற்கான நிகழ்வில் நேற்று (புதன்கிழமை) வட கொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன், கலந்து கொண்டார்.
இதனைத்தொடர்ந்து, பியோங்யாங்கின் ஹ்வாசோங் மாவட்டத்தில் 10,000 புதிய வீடுகளைக் கட்டுவதற்கான இரண்டாம் கட்ட கட்டுமானத் திட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் விழாவிலும் கிம் கலந்துகொண்டார்.
இந்தத் திட்டம் 2025ஆம் ஆண்டு வரை இயங்கும். இது ஐந்தாண்டு தேசிய வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தலைநகரில் 50,000 புதிய வீடுகளை வழங்குவதற்கான பரந்த திட்டங்களின் ஒரு பகுதியாகும்.
வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன், ஒரு இரகசிய நாட்டை ஆட்சி செய்யும் அவரது குடும்பத்தின் மூன்றாவது தலைமுறை ஆவார்.
வட கொரியாவை ஆளும் அவரது குடும்பத்தில் மூன்றாவது தலைமுறையான கிம், தனது ரகசிய நாட்டில் கடவுள் போன்ற அந்தஸ்தை அனுபவித்து வருகிறார். அங்கு அனைத்து அரசியல் எதிர்ப்புகளும் சுதந்திரமான ஊடகங்களும் இரக்கமின்றி அடக்கப்படுகின்றன.