நாட்டின் பொருளாதார மீட்சிக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், அராஜக செயற்பாடுகளை தடுக்கும் வகையில் சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
கொழும்பில் நேற்று முற்பகல் நடைபெற்ற மாநாட்டில் பேசிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த வருட இறுதிக்குள் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
பொருளாதார மீட்சி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு அரசாங்கத்தின் அனைத்து முடிவுகளும் அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சட்டமும் ஒழுங்கும் அவசியமானது என்றும் பொது ஒழுங்கைப் பேணுவதில் ஜனநாயகம் தங்கியிருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது உரையில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார மீட்சியைத் தொடர்ந்து, அடுத்த வருடம் மக்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்தி நாட்டில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளார்.