இஸ்ரேலிய துருப்புக்களால், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, குறைந்தது 11 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று (புதன்கிழமை) காலை துருப்புக்கள் பழைய நகரமான நாப்லஸுக்குள் நுழைந்தபோது, பாலஸ்தீனிய துப்பாக்கிதாரிகளுடன் இந்த மோதல் நிகழ்ந்தது.
சரணடைய மறுத்த ஒரு வீட்டிற்குள் பதுங்கியிருந்த மூன்று தேடப்படும் தீவிரவாதிகளைக் கொன்றதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது.
இரண்டு முதியவர்கள் உட்பட வெளியில் இருந்த பல பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 80க்கும் மேற்பட்டோர்; காயங்களுக்கு ஆளாகியுள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
இந்த சோதனையின் போது லயன்ஸ் டென் மற்றும் பிற போராளி குழுக்களின் ஆறு உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக லயன்ஸ் டென் ஒரு டெலிகிராம் இடுகையில் தெரிவித்துள்ளது.
இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த மாதம் ஜெனினில் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலை விட ஒரு மடங்ஞ அதிகமாகும், இது 2005ஆம் ஆண்டுக்குப் பிறகு மேற்குக் கரையில் நடந்த மிக மோசமான உயிரிழப்பு ஆகும்.