தஜிகிஸ்தானில் சுமார் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சீனா பூகம்ப வலையமைப்பு மையத்தை மேற்கோள் காட்டி சீன அரச ஊடகமான சி.சி.ரி.வி. செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று (வியாழக்கிழமை) காலை 8:37 மணிக்கு தஜிகிஸ்தானில் 10 கிமீ (6 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் சீனாவின் அருகிலுள்ள எல்லையில் இருந்து சுமார் 82 கிமீ தொலைவில் இருந்தது மற்றும் சீனாவின் மேற்கு ஜின்ஜியாங் பிராந்தியத்தில் காஷ்கர் மற்றும் ஆர்டக்ஸ் உள்ளிட்ட சில பகுதிகளில் வலுவாக உணரப்பட்டது என சி.சி.ரி.வி. தெரிவித்துள்ளது.
உயிர்ச்சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. காஷ்கரில் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு இயல்பாகவே உள்ளது என்று மாநில ஊடகமான சின்ஹூவா தெரிவித்துள்ளது.