உக்ரைனிலிருந்து ரஷ்ய துருப்புகள் வெளியேறக் கோரி ஐ.நா. கொண்டு வந்த தீர்மானத்திற்கு, இலங்கை உட்பட 32 நாடுகள் வாக்களிக்கவில்லை.
ரஷ்யா தனது படைகளை உக்ரைனில் இருந்து விலக்கிக் கொள்ளவும், சண்டையை முடிவுக்குக் கொண்டுவரவும் கோரும் சிறப்புத் தீர்மானம், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கு 141 நாடுகள் ஆதரவளித்தும், 7 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்த நிலையில், இலங்கை, இந்தியா, சீனா, பாகிஸ்தான் உட்பட 32 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்தனர்.
எனினும், இந்த சிறப்புத் தீர்மானம், 141 நாடுகள் ஆதரவுடன் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.