அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா குழு) தலைவராக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில், அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் முன்னதாக கோபா குழுவின் தலைவராக செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.