இந்தியா பல பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள இராணுவ விமானங்களைத் தன்னகப்படுத்துவதற்கு முனைகின்றது.
பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்யவதற்கான ஜெட்லைனர் ஒப்பந்தங்களை முடித்துள்ள நிலையில் உலக விமான உற்பத்தியாளர்களை உள்ளீர்க்கும் வகையில் பெங்களுரில் விமான கண்காட்சியை நடத்தி உள்நாட்டில் உற்பத்திகளை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ள.
அணு ஆயுதப் போட்டியாளர்களான சீனா மற்றும் பாகிஸ்தானால் சூழப்பட்ட இந்தியா, உலகின் நான்காவது பெரிய விமானப்படையைக் கொண்டுள்ளது.
இருப்பினும் அதன் சோவியத் கால தளவாடங்களை நவீனமயமாக்குவதற்கு முனைகின்றது.
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் வளர்ந்து வரும் நிலைமையை சமநிலை செய்யவதற்கு இந்தியா விமானம் தாங்கி கப்பல்களுக்கான விமானங்களையும் தன்வசப்படுத்துவதற்கு முனைகின்றது.
பெங்களுரில் ஏரோ இந்தியா 2023 நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ள இந்தியா அதன் மூலமாக விமான நிறுவனங்களை உள்ளீர்க்கும் செயற்பாட்டை விரிவடையச் செய்வதை நோக்காக கொண்டுள்ளது.
ஏர்பஸ் எஸ், மற்றும் போயிங் கோ நிறுவனத்திடம் இருந்து 100 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான மதிப்புள்ள 500 ஜெட் விமானங்களை வாங்குவதற்கான சாதனை ஒப்பந்தத்தை ஏர் இந்தியா அறிவித்தள்ளது.
இந்திய எதிர்வரும் ஆண்டுகளில் 1,500 முதல் 1,700 விமானங்களை வாங்கலாம் என்று ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ உட்பட இந்திய விமான நிறுவனங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி ஆரம்பித்து வைத்துள்ள பெங்களுர் விமானக் கண்காட்சியானது இராணுவ மேலாதிக்கம் கொண்டதாக காணப்படுகின்றபோதும், உள்நாட்டு பயணங்களின் மேம்பாட்டிற்கு இடமளிப்பதோடு, வெளிநாடுகளில் உள்ள போக்குவரத்துக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் முயற்சிப்பதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
லாக்ஹீட் மார்ட்டின் கார்ப், போயிங் மற்றும் ஏர்பஸ் போன்ற உற்பத்தியாளர்கள் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் அல்லது அவ்விமானங்களின் பாகங்களை அதிகமாக தயாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் பிரதமர் மோடி ஏற்கனவே தனது பொருளாதாரக் கொள்கையின் மையப் பொருளாக ‘மேக்-இன்-இந்தியா’ என்பதை அறிவித்துள்ளார்.
உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தை கொண்டிருக்கும் இந்தியா 2021இல் 3.2 ரில்லியனில் இருந்து 2026க்குள் 5 ரில்லியன் டொலராக விரிவுபடுத்துவதற்கான இலக்கைக் கொண்டுள்ள நிலையில் இந்த முயற்சிகள் அவற்றுக்கு பெருந்துணையாக அமையவுள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.