பூட்டான் தனது விவசாயத்துறையை நவீனமயமாக்கும் முயற்சியில் தொடர்ந்து மேம்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஜி.பி.எஸ் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.
அங்குள்ள விவசாயிகள் துல்லியமான அவதானிப்புக்களைப் பயன்படுத்தி தங்கள் பயிர்களை மிகவும் திறம்பட நிர்வகிப்பதில் உறுதியாக உள்ளனர்.
இதன்மூலமாக பயிர் மேலாண்மை பற்றிய தகவலறிந்த முடிவுகளை எடுக்கவும் செயல்திறனை அதிகரிக்கவும் மற்றும் கழிவுகளைக் குறைக்கவும் உதவுகிறது.
மண்ணுக்குப் பதிலாக ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீரைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் பயிர்களை வளர்ப்பதை உள்ளடக்கிய ஹைட்ரோபோனிக் விவசாய முறையை அந்நாடு ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த தொழில்நுட்பம் உள்ளுர் விவசாயிகளுக்கு பயிர்களை மிகவும் திறமையாக வளர்க்க உதவுகிறது. நீர் பயன்பாட்டை குறைக்கிறது மற்றும் ஆண்டு முழுவதும் உணவு பாதுகாப்பை வழங்குகிறது.
அத்துடன், விவசாயிகளுக்கு தகவல் மற்றும் ஆதாரங்களை அணுகுவதற்கான முயற்சிகளையும் அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பயிர் மேலாண்மைக்கான சிறந்த நடைமுறைகள் மற்றும் பிற தொடர்புடைய தலைப்புகள் பற்றி விவசாயிகள் அறிந்து கொள்வதற்கு தகவல் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் விவசாயத்துறையின் உற்பத்தித்திறன் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்தவும் அதை மிகவும் திறமையாகவும் மீள்தன்மையுடனும் நாடு செய்ய முடியும்.
விவசாயிகளை ஆதரிப்பதற்காக அரசாங்கத்தின் இந்த முயற்சிகள் நிச்சயமாக இந்தத் துறைக்கும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஊக்கத்தை அளிப்பதாக உள்ளது.
ஜூன் 2023 க்குள் பூட்டான் குறைந்த வளர்ச்சி நாடுகள் அந்தஸ்தில் இருந்து உயவடையும் பாதையில் இருப்பதால் இந்த முயற்சிகள் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு உதவுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
அதிகாரிகளின் கூற்றுப்படி நாட்டின் நிலை மாற்றம் நாட்டின் வெளிநாட்டு உதவி ஆதரவை பாதிக்காது.
முக்கியமாக விவசாய கற்கையில் ஈடுபவர்களுக்காக சர்வதேச வர்த்தகம் மேம்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் நிதிக்கான பங்களிப்புகள் உத்தியோகபூர்வ கூட்டங்களுக்கு பயணம் செய்வதற்கான உதவித்தொகை மற்றும் ஆராய்ச்சி மானியங்கள் என்பவற்றைக் கொண்டுள்ளது.