புதுடில்லிக்கும், வொஷிங்டனுக்கும் இடையிலான வலுவான உறவுகளை எடுத்துரைத்த அமெரிக்க தூதுவர் எலிசபெத் ஜோன்ஸ் ‘இந்தியா எங்கள் விருப்பத்துடனான கூட்டாளி’ என தெரிவித்துள்ளார்.
ஜி20 தலைவர் பதவியைப் பெற்றுள்ள இந்தியாவை வாழ்த்துகிறோம், மேலும் வலுவான அமெரிக்க பங்கேற்பை எதிர்பார்க்கிறோம்.
இந்தியாவும் அமெரிக்காவும் சுதந்திரமான மற்றும் திறந்த, வளமான, இணைக்கப்பட்ட, விதிகள் அடிப்படையிலான மற்றும் நெகிழ்ச்சியான இந்தோ – பசிபிக் பிராந்தியத்தை உறுதிசெய்வதற்கு பல வழிகளில் முக்கியமான பங்காளிகளாக உள்ளன.
ஜனாதிபதி ஜோ பைடன் இந்தோ – பசிபிக் மூலோபாயத்தின் முதலாவது ஆண்டினை நிறைவு செய்துள்ளார்.
இதுவே இரு நாடுகளுக்கான உறுதிப்பாட்டை ஆதரிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும், உலகளாவிய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், புதிய தொற்றுநோய்களுக்குத் தயாராகவும், இணைய சவால்களில் ஒத்துழைக்கவும், தரமான உள்கட்டமைப்பை உருவாக்கவும், நிலையான விநியோகச் சங்கிலிகளை உறுதிப்படுத்தவும் நாங்கள் ஒன்றித்து பணியாற்றுகின்றோம் என்றும் ஜோன்ஸ் கூறினார்.
இந்தோ-பசிபிக் மூலோபாயம் பிராந்தியத்தில் உள்ள சவால்களைச் சமாளிக்க கூட்டுத் திறனை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.
சீனாவின் சவால்கள், அமெரிக்க உறவை முன்னேற்றுதல், இந்தியாவுடனான ‘முக்கிய பாதுகாப்பு கூட்டுறவு’ மற்றும் பிராந்தியத்தில் நிகர பாதுகாப்பு வழங்குநராக அதன் பங்கை ஆதரித்தல் ஆகியவை முக்கியமான விடயங்களாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
விண்வெளிக் கூறுகள் முதல் குறைக்கடத்திகள் வரையிலான முக்கியமான தொழில்நுட்பங்களில் இரு நாடுகளும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகின்றதோடு, இரண்டு வாரங்களுக்கு முன்பு, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டோவல், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்த முயற்சியைத் மேம்படுத்துவதற்காக வெள்ளை மாளிகையில் சந்திப்பொன்றையும் நடத்தியுள்ளார்.
இருதரப்பு பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பு மூலம் கூட்டு வளர்ச்சி மற்றும் உற்பத்தியை துரிதப்படுத்துவதற்கு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
நிச்சயமாக, இவை அனைத்தையும் சாத்தியமாக்குவதற்கு பொருளாதார வளர்ச்சியே முக்கியமாகும்,’ என்றும் ஜோன்ஸ் மேலும் கூறினார்.
அந்த வளர்ச்சியை கட்டியெழுப்புவதற்காக அமெரிக்கா மற்றும் இந்திய நிறுவனங்கள் கூட்டு சேர வேண்டியுள்ளன.
ஒவ்வொரு புதிய கூட்டாண்மையும் ஒரு சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை பராமரிக்க தேவையான பொருளாதார உறுதிப்பாட்டை வழங்குவதற்கு உதவுகிறது,’ என்று அவர் மேலும் கூறினார்.