ஜம்மு மற்றும் காஷ்மீர் முழுவதும் சாலை இணைப்புக்கு பெரிய உந்துதலைக் கொடுக்கும் வகையில், யூனியன் பிரதேச நிர்வாகம் ஒவ்வொரு நாளும் 20 கிலோமீற்றர் மற்றும் 15 கிலோமீற்றர் விரிவாக்கத்தை உறுதி செய்கிறது.
மேலும், அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 100பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இதனால் வாகனங்கள் சுமூகமாக செல்ல முடியும் என்று நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.
2023ஆம் ஆண்டிற்குள் கிராமப்புறங்களுக்கு அனைத்து நகர்ப்புற வசதிகளையும் வழங்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மக்கள் கடந்த 70ஆண்டுகளாக இழந்த சாலை இணைப்பின் முழுப் பலனையும் அடுத்து வரும் சொற்ப காலத்திற்குள் அனுபவகிக்க உள்ளனர்.
மேலும் ஜம்மு காஷ்மீரில் சாலைக் கட்டுமானப் பணிகள் 2019-க்குப் பிறகு உத்வேகம் நடைந்துள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் முக்கியமான நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன
இந்த முயற்சி யூனியன் பிரதேசம் முழுவதும் உள்ள முக்கிய இடங்களுக்கு இடையிலான பயண நேரத்தை கணிசமாகக் குறைத்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் சாலை வலையமைப்பை நிறைவு செய்தவற்காக சுமார் ஒரு இலட்சம் கோடி செலவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.