ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52வது கூட்டத்தொடர் இன்று(திங்கட்கிழமை) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.
மார்ச் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தின் போது இலங்கை விவகாரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.
இதற்கமைய, மார்ச் மாதம் 8ஆம் 9ஆம் திகதிகளில் இலங்கை தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.
இம்முறை ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் தான் கலந்து கொள்ளவில்லை எனவும் இலங்கை சார்பில் அதிகாரிகள் குழுவொன்று ஜெனிவா செல்லவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
சட்ட மா அதிபர் திணைக்களம், வெளிவிவகார அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கை சார்பில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.