இலங்கை சனத்தொகையில் 15 சதவீத பெண்களும், 6.3 சதவீத ஆண்களும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது ஆண் மற்றும் பெண் மக்களிடையே அதிக எடை மற்றும் உடல் பருமன் அதிகரித்துள்ளதாக மருத்துவ நிபுணர் சாந்தி குணவர்தன தெரிவித்துள்ளார்.
உடல் நிறை குறியீட்டெண் அடிப்படையில், உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, ஆரோக்கியமான ஒருவரின் பிஎம்ஐ என்ற உடல் பருமன் கணக்கீடு 18.5 முதல் 24.9 வரை இருக்க வேண்டும்.
30 வயதிற்கும் மேற்பட்டவர்களின் பிஎம்ஐ 25 முதல் 29.9 இற்கு இடைப்பட்ட பிஎம்ஐ அதிக எடை கொண்டதாகவும் இருக்கவேண்டும் என மருத்துவ நிபுணர் சாந்தி குணவர்தன தெரிவித்துள்ளார்.