கத்தோலிக்க புனித திருத்ததலமாகிய கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம், இன்று (சனிக்கிழமை) நடைபெறுகின்றது.
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று மாலை நான்கு மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதனை தொடர்ந்து பாதை சிலுவை ஆலயத்தை சுற்றி வலம் வரும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்தநிலையில், இன்று காலை 7 மணியளவில் யாழ் மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் திருப்பலி. ஒப்புக்கொடுக்கப்பட்டது.
60 நாட்டு படகுகள் மூலமாகவும், 16 இழுவை மடி படகுகள் மூலமாகவும் இந்தியாவிலிருந்து 2100 பக்தர்களும், இலங்கையிலிருந்து கடற்படையினரின் படகுகள் மூலமும் ஏனைய தனியார் படகுகள் மூலமும் 2800 பக்தர்களும், வியாபாரிகள் 200 பேர் என மொத்தமாக 5100 பேர் கச்ச தீவு பெருநாளில் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்முறை வருடாந்த கச்சத்தீவு உற்சவத்திற்கு இலங்கை கடற்படை, இந்திய துணை தூதரகம், இலங்கையின் வெளிவிவகார அமைச்சு ஆகியன முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.