நுவரெலியா, லபுக்கல பகுதியில் மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறி வீதியை விட்டு விலகி சுமார் 70 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் நேற்று (5) இடம்பெறுள்ளது.
இதன்போது லொறியில் பயணித்த 14 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா கம்பளை பிரதான வீதியில் நுவரெலியா, லபுக்கல தேயிலை தொழிற்சாலைக்கு அருகிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவர்களில் படுகாயமடைந்த 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு லொறியில் பயணித்தவர்களில் ஒருவர், லொறி பள்ளத்தில் குடைசாயும் முன்பே லொறியில் இருந்து வெளியே குதித்து உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதிவேகமாக சென்ற லொறியின் வேகத்தை சாரதி கட்டுப்படுத்த முற்பட்டபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.