நிதி பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கையும் இந்தியாவும் ஆராய்ந்து வருகின்றன.
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இரு நாடுகளுக்கும் இடையிலான பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை பயன்படுத்துவது குறித்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்தது.
இதன்போது Vostro/Nostro கணக்குகள் மூலம் குறிப்பிடப்பட்ட வர்த்தக பரிவர்த்தனைகளை மேற்கொள்வது குறித்தது இலங்கை வங்கி, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துரையாடினர்.