கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேருக்கு கேகாலை மாகாண மேல் நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சுமார் 9 வருடங்களுக்கு முன்னர் கேகாலை பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற விருந்தின் போது சீமெந்து கல்லினால் தாக்கி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.