தமிழ்நாட்டில் எந்தவொரு புலம்பெயர் தொழிலாளியும் தாக்கப்படவில்லை என பீகாரில் இருந்து ஆய்வு செய்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் 4 அதிகாரிகள் கொண்ட குழுவினர், பீகார் தொழிலாளர்களை சந்தித்து நிலைமை தொடர்பாக கேட்டறிந்தனர்.
இதனை அடுத்து பாட்னாவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த இக்குழுவினர் தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடைபெறுவதாக வெளியான செய்திகள் தவறானவை என கூறியுள்ளனர்.
இதனிடையே தாக்குதல் நடத்தப்பட்டதாக போலி வீடியோக்களைப் பரப்பிய இரண்டு பேரை பீகார் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.



















