டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வலுவடைவதற்கு பல காரணங்கள் இருப்பதாக கொழும்பு பல்கலைக் கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த வருட இறுதிக்குள் டொலரின் பெறுமதி மீண்டும் உயரலாம் என ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ள நிலையிலேயே பேராசிரியர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
டொலர்களை வைத்திருந்த தரப்பினர் அந்த டொலர்களை சந்தையில் விடுவித்தமை ரூபாயின் பெறுமதி வலுவடைய காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.