வேல்ஸ் அரசாங்கம் புதிய ஊதியச் சலுகையை முன்மொழிந்ததை அடுத்து, வேல்ஸில் உள்ள ஆசிரியர்கள் திட்டமிட்டிருந்த வேலைநிறுத்தங்களை மீளப்பெற்றுள்ளனர்.
தேசிய கல்வி சங்கத்தின் உறுப்பினர்கள், மார்ச் 15 மற்றும் மார்ச் 16 ஆகிய இரு திகதிகளில் வெளிநடப்பு செய்யவிருந்தனர்.
ஆனால், வேல்ஸ் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து வேலைநிறுத்தங்கள் ரத்து செய்யப்படுவதாக தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சர் ஜெரமி மைல்ஸ், ஆசிரியர்களுக்கு 2022-23 ஆம் ஆண்டிற்கான ஊதியத்தில் 8 சதவீத உயர்வு வழங்க முன்வந்துள்ளார்.
இந்த ஆண்டு ஊதிய உயர்வால் உறுப்பினர்கள் பயனடைய வேண்டுமானால், மார்ச் 17ஆம் திகதிக்குள் அவர்கள் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும் என்று வேல்ஸ் அரசாங்கம் தொழிற்சங்கங்களுக்கு கூறியது.
மைல்ஸ், கல்வியாண்டின் இறுதி வரை நடவடிக்கையை நிறுத்தி வைத்தால், பேச்சு வார்த்தைகள் தொடரும் என்பதால், ஆசிரியர்களுக்கு உயர்வு கொடுப்பதாக கூறினார்.