நெற்பயிர்ச் செய்கைக்காக வழங்கப்படும் உரம் விவசாயிகளுக்குத் தேவையில்லை என்றால், தேயிலை மற்றும் மரக்கறி பயிர்ச்செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள விவசாய சங்கங்களுடன் அண்மையில் விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் குறித்து கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய விடயங்கள் காரணமாக இயற்கை உரங்கள் தொடர்பாக நெற்பயிர்ச் செய்கை செய்யும் விவசாயிகளுக்கு நம்பிக்கை இல்லை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இம்முறை இயற்கை உரத்தை விவசாயிகள் மறுத்தால், தேயிலை மற்றும் மரக்கறி பயிர்ச்செய்கை விவசாயிகளுக்கு வழங்குமாறு விவசாய அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.














