சத்திரசிகிச்சை மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமிர, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அவருக்கு உடல் நிலை சரியில்லை என இலங்கை கிரிக்கெட் மருத்துவ குழுவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், துஷ்மந்த சமிர நியூசிலாந்துடனான T20 தொடரில் இணைக்கப்படுவார் என அர்ஜுன டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.