இலங்கைக்கான ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் உயர்ஸ்தானிகர் (H.E. Khaled Nasser Sulaiman Al Ameri) க்கும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பிலும் குறிப்பாக திருகோணமலை மாவடத்தின் அபிவிருத்தி குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள முதலீட்டாளர்களுக்கு கிழக்கு மாகாணத்தில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை அறிமுகப்படுத்துவதற்கான நிரந்தர வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பது தொடர்பில் இச்சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் கிளையொன்றை நிறுவி ஐக்கிய அரபு இராச்சியத்தின் முதலீட்டாளர்களுக்குத் தெரிவிக்கும் முறைமை ஒன்றை ஏற்படுத்துமாறும் தூதுவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுற்றுலா மற்றும் இயற்கை விவசாயம் ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் வகையில் அந்த திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் அவர்கள் கவனம் செலுத்தினர்.
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் சுற்றுலா வலயங்களில் புதிய விளம்பரத் திட்டங்களை முன்னெடுக்குமாறும் தூதுவரிடம் ஆளுநர் கோரிக்கை விடுத்தார். இதுபற்றி விரைவில் அரசுக்கு தெரிவிப்பேன் என்று தூதுவர் கூறினார்.
இதேவேளை, ஐக்கிய அரபு இராச்சியம் 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டிலும் உலகிலும் பல பெறுமதிமிக்க கடற்பரப்புகளில் 10 மில்லியன் சதுப்புநில செடிகளை நடும் விசேட வேலைத்திட்டத்தை இந்த வருடம் ஆரம்பித்துள்ளதுடன், கிழக்கு மாகாணத்தின் கடல் திரையும் அந்த வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்படும்.
சந்திப்பின் இறுதியில் தூதுவருக்கும் ஆளுநருக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வில் மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ் ரத்நாயக்க, ஆளுநரது உதவி செயலாளர் ஏ.ஜி.தெய்வேந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.