மருந்து தட்டுப்பாடு தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகள் அடிப்படையற்றவை என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பிரதான நிலை ஊடகங்கள் சுகாதாரத்துறை தொடர்பில் பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளமை கவலைக்குரியது எனவும் அவர் கூறியுள்ளார்.
மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச நிதி நிறுவனம் ஒன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஊடாக சுகாதாரத்துறை அமைச்சுக்கு 500 மில்லியன் டொலர் கிடைக்கப்பெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளமை முற்றிலும் அடிப்படையற்றதாகும்.
குறித்த நிதி நிறுவனம் 500 மில்லியன் டொலரை வழங்க கொள்கை ரீதியில் இணக்கம் தெரிவித்துள்ளது.
ஆனால் 100 மில்லியன் டொலர்களை மாத்திரமே வழங்கியுள்ளது எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.