இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 10 விக்கெட்களால் வெற்றிபெற்று அவுஸ்ரேலிய அணி தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.
விசாகப்பட்டினத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய அணி, முதலில் இந்திய அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 26 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 117 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக விராட் கோஹ்லி அதிகபட்சமாக 31 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க பந்துவீச்சில் ஸ்டார்க் 5 விக்கெட்களையும் அபோட் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 118 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி எவ்வித விக்கெட் இழப்பும் இன்றி 11 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்தது.
அவுஸ்ரேலிய அணி சார்பாக டிராவிஸ் ஹெட் 51 ஓட்டங்களையும் மிட்செல் மார்ஷ் 66 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக்கொடுத்தனர்.
இதனால் 3 போட்டிகளில் கொண்ட ஒருநாள் தொடரை 1- 1 என அவுஸ்ரேலிய அணி சமநிலை படுத்தியுள்ள நிலையில் 3 ஆவது போட்டி மிகவும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.