ஐ.எம்.எப். இடமிருந்து கடனைப் பெறாமல் அரசாங்கம் வீழ்ந்த பின்னர் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்க எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் முயற்சித்தார்கள் என மஹிந்தானந்த அழுத்தகமே குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களை வீதிக்கு இறக்கிவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற எதிர்கட்சியால் பல அரசியல் நாடகங்கள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்கு நிதி உதவி கிடைக்கக் கூடாது என்பதே அவர்களின் விருப்பம் எனவும் மஹிந்தானந்த அழுத்தகமே குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்வாறு எண்ணியவர் எதிர்க்கட்சியில் உள்ளார்கள் என்றும் இருப்பினும் அவர்களது பெயரை அம்பலப்படுத்த போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.