இலங்கையில் சமூக- பொருளாதார நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மனிதாபிமான உதவிக்காக ஜப்பான் அரசாங்கம் 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஐக்கிய நாடுகளின் பெண்கள் அமைப்புக்கு வழங்கியுள்ளது.
இந்த நிதியானது, ‘நெருக்கடியில் உள்ள பெண்களை வலுவூட்டல்’ என்ற புதிய செயற்திட்டத்தின் ஒரு பகுதியென்பதுடன், இது பெப்ரவரி 2023 முதல் டிசம்பர் 2023 வரை செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது பாலின மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறையை எதிர்கொண்ட குறைந்தது 1,200 பெண்கள் உட்பட அவர்களின் குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது வீழ்ச்சியடையும் அபாயத்தில் உள்ள 500 பெண்கள் தலைமையிலான நுண் நிறுவனங்களுக்கும், வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டின் அபாயத்தில் உள்ள 2,000 நபர்களுக்கும் மேலும் ஆதரவளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.