வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் தென்னாபிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவுவதில் தென்னாபிரிக்காவின் அனுபவம் குறித்த நுண்ணறிவுகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் இவர்களின் பயணம் அமைந்துள்ளது.
தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் கலாநிதி நலேடி பாண்டூரின் அழைப்பின் பேரில், இவர்கள் தென்னாபிரிக்காவுக்கு தொழில்முறை விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
உள்நாட்டுப் பொறிமுறைகளின் மூலம் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதில் உறுதியாக இருப்பதாக சர்வதேச அரங்குகள் உட்பட பல தளங்களில் உறுதியாகக் கூறப்பட்ட இலங்கையின் கொள்கைக்கு இணங்க இந்த விஜயம் அமைந்துள்ளது.