சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையானது பொருளாதாரத்தின் மறுசீரமைப்பு என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சட்டப்படி அனுமதி தேவையில்லாத போதிலும், சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதியையும் உதவியையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
நாட்டின் கடனில் மட்டுமின்றி இந்த ஒப்பந்தத்தை நாடு அமுல்படுதுமா? இல்லையா? என்பதிலேயே இலங்கையின் எதிர்காலம் தங்கியுள்ளது என்று தெரிவித்த அவர், கடனை செலுத்தவேண்டுமாயின் வீட்டிலிருக்கும் ஒரு பொருளை விற்றே ஆகவேண்டும் என கூறினார்.
எல்லா பங்கங்களிலும் தவறுகள் உள்ளன. அவற்றை திருத்திக்கொண்டு இணைந்து உதவுங்கள், சிந்தனைகளில் மாற்றங்கள் ஏற்படுத்துங்கள் எனக் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி பழைய விளையாட்டை விளையாட முடியாது எனவும் பல திட்டங்களை எதிர்த்தவர்கள் எம்மோடு இருக்கின்றனர் என்றால் நல்லதுதானே எனவும் கூறினார்.