தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் காலமானார்.
சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை 3:15 மணி அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இவரின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் இன்று காலை 10 மணிக்கு தகனம் செய்யப்படவுள்ளது.