பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்களால் வெற்றிபெற்றுள்ளது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 92 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனை அடுத்து 93 என்ற வெற்றி இலக்கோடு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 17.5 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரில் 1-0 என ஆப்கானிஸ்தான் அணி முன்னிலை வகிக்கின்றது.