இன்று முதல் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாயாலும், 400 கிராம் பால்மாவின் விலையை 80 ரூபாயாலும் குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில், இன்று முதல் ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 90 ரூபாய் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பால்மா மற்றும் சீனி என்பவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
பால் தேநீர் தற்போது 100 ரூபா முதல் 130 ரூபாவுக்கு இடைப்பட்ட விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.