மெதிரிகிரியவில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் தனது கணவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு மாணவர்களின் காலை உணவிற்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் உணவு தயாரித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஹிகுராக்கொட பிராந்திய கல்விப் பணிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிள்ளைகளின் உணவுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி அதிபர் தனது கணவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு உணவு தயாரித்ததாக பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
அது தொடர்பாக, வட்டாரக் கல்வி அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாக அறிவிக்க பெற்றோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
அதன்படி, ஹிகுராக்கொட பிராந்திய கல்விப் பணிப்பாளர் சம்பந்தப்பட்ட பாடசாலைக்குச் சென்று அதிபர் மற்றும் பல ஆசிரியர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளார்.
அத்துடன், குறித்த பாடசாலையின் அதிபர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.