இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை பாரியளவில் குறைக்கப்பட்டுள்ளதால், மக்களுக்கு பயனளிக்காமல் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை கண்டுபிடிக்க விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருவதால், அதிகரிக்கப்பட்ட பெரும்பாலான பொருட்களின் விலைகள் தற்போது குறைந்துள்ளன.
எனினும், பல கடை உரிமையாளர்கள் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதாக அதிகாரசபைக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
எனவே, நாடளாவிய ரீதியில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தேடி விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியல்ல தெரிவித்துள்ளார்.